கலைஞர் பெற்றுத்தந்த உரிமையோடு தேசியக் கொடியை ஏற்றி உள்ளேன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கலைஞர் பெற்றுத்தந்த உரிமையோடு 75-வது சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி உள்ளேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
இந்தியர் எனும் பெருமை, அமைதி அறவழி காட்டிய அண்ணல் காந்தியடிகளையே சாரும்! மதவெறியர்களால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டபோது, 'காந்தி தேசம்' எனப் பெயரிட வலியுறுத்தினார் பெரியார்!
தலைவர் கலைஞர் பெற்றுத்தந்த உரிமையோடு, 75-வது சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியேற்றி, நம் தியாக வரலாற்றை நினைவுகூர்ந்தேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.