ஹுண்டாய் வென்யூ N Line உடன் உற்சாகத்தின் உச்சத்தை தினசரி அனுபவியுங்கள்! ஹுண்டாய் வென்யூ N Line மெட்டாவெர்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் வீடியோ..
இந்தியாவின் முதல் ஸ்மார்ட் மொபிலிட்டி தீர்வுகள் வழங்குனர் மற்றும் தொடக்கத்திலிருந்தே இந்தியாவின் மிகப்பெரிய கார் ஏற்றுமதியாளர் ஆகிய பெருமைகளைக் கொண்டிருக்கும் ஹுண்டாய் இந்தியா லிமிடெட், அதன் காம்பேக்ட் ஸ்போர்ட்டி எஸ்யுவி ஹுண்டாய் வென்யூ N Line – ஐ இன்று அறிமுகம் செய்திருக்கிறது.;
- இந்தியச் சந்தையில் ஒரு புதிய பிரிவை உருவாக்கும் வாகனமாக ஹுண்டாய் வென்யூ N Line அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது; கலப்படமற்ற ஸ்போர்ட்டியான மற்றும் ஆனந்தமான டிரைவிங் அனுபவத்தை இது வழங்குகிறது.
- சிறப்பான செயல்திறன், ஸ்போர்ட்டியான ஸ்டியரிங் மற்றும் சஸ்பென்ஷன் டியூனிங், எக்ஸாஸ்ட் சவுண்டு டியூனிங் மற்றும் அனைத்து 4 டிஸ்க் பிரேக்குகள் ஆகியவற்றுடன் இந்த ஸ்போர்ட்டியான காம்பேக்ட் எஸ்யுவி தனித்துவமானதாக திகழ்கிறது.
- ஹுண்டாய் – ன் மோட்டார்ஸ்போர்ட் DNA – லிருந்து உத்வேகம் பெற்றிருக்கும் ஹுண்டாய் வென்யூ N Line, இதற்கு ஒரு தனித்துவமான தோற்றத்தை வழங்கும் ஸ்போர்ட்டியான மற்றும் கிளர்ச்சியூட்டும் வடிவமைப்பு அழகியல் அம்சங்களைக் கொண்டிருக்கிறது.
- ஹுண்டாய் வென்யூ N Line, 1.0 | 7DCT உடன் கூடிய டர்போ GDi பெட்ரோல் இன்ஜினால் இயக்கப்படுகின்ற N6 மற்றும் N8 ட்ரிம்களில் கிடைக்கும்.
- ஹுண்டாய் வென்யூ N Line, ஒரு கிளர்ச்சியூட்டும் மொபிலிட்டி அனுபவத்தை வழங்க 30 தனிச்சிறப்பான, பிரத்யேகமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது.
- 7 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட வாரண்ட்டி விருப்பத்தேர்வு, 3 ஆண்டுகள் இலவச சாலையோர சர்வீஸ் உதவி, 3 ஆண்டுகளுக்கான – ப்ளூ லிங்க் சந்தா மற்றும் 5 ஆண்டுகளுக்கு ஹுண்டாய் நம்பிக்கை, கவனிப்பு மற்றும் பராமரிப்பு தொகுப்புகள் ஆகியவற்றின் மூலம் முழுமையான மனநிம்மதியை வாடிக்கையாளர்களுக்கு ஹுண்டாய் வென்யூ N Line வழங்கும்.
- ₹1216000/- (எக்ஸ் – ஷோரூம் ஒரு இந்தியா ஒரு விலை) என்பதிலிருந்து ஆரம்பமாகும் விலைகளுடன் இந்த ஸ்போர்ட்டியான ஹுண்டாய் வென்யூ N Line இப்போது அனைவரும் வாங்கி மகிழ கிடைக்கப்பெறுகிறது.
- ஹுண்டாய் வென்யூ N Line, அனைத்து ஹுண்டாய் சிக்னேச்சர் அவுட்லெட்களிலும் கிடைக்கும்.
- பயனாளிகள் இவற்றை கண்டறிந்து பயன்படுத்த இயலும் வகையில், ஹுண்டாய் வென்யூ N Line அறிமுகத்திற்கான மெட்டாவெர்ஸ், 70-க்கும் அதிகமான வலைதள அமைவிடங்களை உள்ளடக்கும்;
- இதற்கு முன்பு ஒருபோதும் கண்டிராத, ராப்லாக்ஸ் மீதான ஹுண்டாய் வென்யூ N Line – ன் மெட்டாவெர்ஸ் அனுபவம், பயனாளிகள் அனுபவித்து மகிழ்வதற்காக ஒரு மாதம் வரை கிடைக்கப்பெறும்.
குருகிராம்,
இந்தியாவின் முதல் ஸ்மார்ட் மொபிலிட்டி தீர்வுகள் வழங்குனர் மற்றும் தொடக்கத்திலிருந்தே இந்தியாவின் மிகப்பெரிய கார் ஏற்றுமதியாளர் ஆகிய பெருமைகளைக் கொண்டிருக்கும் ஹுண்டாய் இந்தியா லிமிடெட், அதன் காம்பேக்ட் ஸ்போர்ட்டி எஸ்யுவி ஹுண்டாய் வென்யூ N Line – ஐ இன்று அறிமுகம் செய்திருக்கிறது. ஒரு புதிய பிரிவு உருவாக்குனராக இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஹுண்டாய் வென்யூ N Line, கலப்படமற்ற ஸ்போர்ட்டியான மற்றும் ஆனந்தமான டிரைவிங் அனுபவத்தை வழங்குகிறது. சிறப்பான செயல்திறன், ஸ்போர்ட்டியான ஸ்டியரிங் மற்றும் சஸ்பென்ஷன் டியூனிங், எக்ஸாஸ்ட் சவுண்டு டியூனிங் மற்றும் அனைத்து 4 டிஸ்க் பிரேக்குகள் ஆகியவற்றுடன் இந்த ஸ்போர்ட்டியான காம்பேக்ட் எஸ்யுவி தனித்துவமானதாக திகழ்கிறது. இந்தியாவில் ஒரே ஸ்போர்ட்டியான காம்பேக்ட் எஸ்யுவி என நன்கு வரையறை செய்யப்பட்ட தனித்துவமான இடத்தை ஹுண்டாய் வென்யூ N Line தனதாக்கிக் கொண்டிருக்கிறது. ஒரு ஸ்போர்ட்டியான மற்றும் ஓட்டுவதற்கு உற்சாகமும், மகிழ்ச்சியும் தரும் ஒரு காம்பேக்ட் எஸ்யுவி வாகனத்தை சொந்தமாக கொண்டிருக்க வேண்டும் என்று தேடுகின்ற வாடிக்கையாளர்களுக்கு உற்சாகத்தின் உச்சத்தை உயர்த்தவும் மற்றும் சாகசத்தை அனுபவிக்கவும் அனுமதிப்பதற்கு ரூ.1216000 (எக்ஸ் – ஷோரூம்) என்ற ஆரம்ப விலையைக் கொண்டிருக்கும் ஹுண்டாய் வென்யூ N Line தயாராக இருக்கிறது.
ஹுண்டாய் மோட்டார் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு. உன்சூ கிம், ஹுண்டாய் வென்யூ N Line அறிமுகம் குறித்து கூறியதாவது: "போக்குவரத்து என்பதையும் கடந்து வாடிக்கையாளர் அனுபவங்களை உயர்த்துவதற்கான எமது செயல்முயற்சிகளும் மற்றும் இந்தியாவில் போக்குவரத்துத் துறையின் மேம்பட்ட உருமாற்றம் மீதான எமது பொறுப்புறுதியும் தொடர்ந்து வலுவாக இருந்து வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு மொபிலிட்டி அனுபவங்களை மறுவரையறை செய்யும் எமது தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஹுண்டாய் வென்யூ N Line இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த புதிய அறிமுகத்தின் மூலம் 2 ஆண்டுகள் என்ற குறுகிய காலஅளவிற்குள் 2 N Line மாடல்களை நாங்கள் இப்போது வழங்கவிருக்கிறோம். இந்திய வாடிக்கையாளர்களுக்கு எமது 1வது காம்பேக்ட் எஸ்யுவி N Line மாடலாக ஹுண்டாய் வென்யூ N Line இப்போது அறிமுகமாகிறது.
மெட்டாவெர்ஸில் ஒரு அற்புதமான பயணத்தை பயனாளிகளுக்கு வழங்க இந்தியா ஜோன், டெஸ்ட் டிரைவ் டிராக், வென்யூ N Line ஜோன், ஷோரூம், சர்வீஸ் சென்டர், மினி கேம், போட்டோ பூத், டிரெஷர் ஹன்ட் மற்றும் N Line மெர்ச்சண்டைஸ் என பல்வேறு புதுமையான, ஈடுபாடு கொள்ளச்செய்யும் செயல்பாடு பகுதிகளை கொண்டிருக்கிறது. ஒரு தனித்துவமான, வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் வாய்ப்புடன் ஹுண்டாய் வென்யூ N Line – ஐ டெஸ்ட் டிரைவ் செய்யும் விருப்பத்தேர்வும் மற்றும் தங்கள் விருப்பத்திற்கேற்ப இதனை தனிப்பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளவும் முடியும்.
இதன் உருவாக்க கருத்தாக்கம்
புதிய சாகசங்களை நாடுகின்ற அறிவார்ந்த வாடிக்கையாளர்களின் துரித மற்றும் துடிப்பான வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வகையில் ஹுண்டாய் வென்யூ N Line – ன் முக்கிய தகவலளிப்பாக 'It's time to play' இருக்கிறது. தினசரி டிரைவிங்கில் த்ரில்லை விரும்புகின்ற வாடிக்கையாளர்களுக்கு உயிரோட்டமுள்ள டிரைவிங் அனுபவத்தை உற்சாகமூட்டும் ஸ்டைலோடு இணைத்து இது வழங்குகிறது. இந்திய சந்தைக்காக 4 முக்கிய தூண்களின் அடிப்படையில் ஹுண்டாய் வென்யூ N Line வெளிவருகிறது.
- ஆற்றலூட்டும் வெளிப்புற வடிவமைப்பு
- ஈடுபாடு கொள்ளச் செய்யும் உட்புற வடிவமைப்பு
- உற்சாகமூட்டும் செயல்திறன்
- கவர்ந்திழுக்கும் உயர் தொழில்நுட்பம்
மோட்டார் ஸ்போர்ட்டியிலிருந்து உத்வேகம் பெற்றிருக்கும் வடிவமைப்பு அம்சங்களைத் தாங்கிய ஹுண்டாய் வென்யூ N Line, ஸ்போர்ட்டியான தோற்றத்துடன் மேம்பட்ட டிரைவிங் அனுபவங்களை வழங்குவதற்கெனவே இதன் வெளிப்புற வடிவமைப்பு மிக நேர்த்தியாக அமைந்திருக்கிறது. N Line லோகோவைக் கொண்டிருக்கும் டார்க் குரோம், முன்புற கிரில், ஸ்கிட் பிளேட்டுகளுடன் கூடிய பிரத்யேக பம்ப்பர், ரெட் இன்செர்ட்களுடன் கூடிய ரூஃப் ரேல்ஸ் போன்ற பல அம்சங்கள் இதற்கு கம்பீரமான தோற்றத்தையும், ஸ்போர்ட்டியான ஈர்ப்புத்திறனையும் வழங்குகிறது. இதன் டெய்ல் கேட்டில் இடம்பெறும் N Line சின்னம் இந்தியாவிற்குள் மட்டுமே அறிமுகம் செய்யப்படும் தனித்துவ அம்சமாகும்.
இக்காரின் கேபினுக்குள் நீங்கள் நுழையும் ஒவ்வொரு முறையும் கட்டுப்பாட்டை மீறி உற்சாகம் உங்களை ஆக்கிரமிக்கும் என்பது நிச்சயம். வெளிப்புற வடிவமைப்பை இன்னும் மேம்படுத்தும் வகையில் ஹுண்டாய் வென்யூ N Line – ன் உட்புற அலங்காரம் ஸ்டைலாகவும், எதிர்காலத்திற்குரியதாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. N பிராண்டிங் உடன் கூடிய பிரத்யேக, முழு லெதர் இருக்கைகள், N பிராண்டிங் உடன் கூடிய 3-ஸ்போக் லெதர் ஸ்டீயரிங் வீல், ஸ்போர்ட்டியான மெட்டல் பெடல்கள் மற்றும் டோர் ஹேண்டில்களுக்கு உட்புறத்தில் டார்க் மெட்டல் ஃபினிஷ், கிளர்ச்சியூட்டும் சிவப்பு நிற சூழல் விளக்கு ஆகியவை உட்புற அலங்காரத்தை தனித்துவமாக்கி காட்டுகின்றன.
7 ஸ்பீடு DCT உடன் 1.0 கப்பா டர்போ GDi பெட்ரோல் இன்ஜினின் மூலம் இயக்கப்படும் ஹுண்டாய் வென்யூ N Line, மிருதுவான ஆற்றலை வழங்குவதை உறுதிசெய்யும் வகையில் பவர் டிரெயினை கொண்டிருக்கிறது. நார்மல், எக்கோ, ஸ்போர்ட் என்ற டிரைவ் மோடு செலக்ட் அம்சத்தின் மூலம் நீங்கள் விரும்புகிறவாறு, சிக்கனமான, சமநிலையான மற்றும் த்ரில்லிங்கான அனுபவத்தை வழங்கும் பயணத்தை மேற்கொள்ள முடியும். நீங்கள் எங்கு சென்றாலும் பார்ப்பவர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த எஸ்யுவி – ன் எக்ஸாஸ்ட் சத்தம் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Engine | Maximum Power | Maximum Torque | Transmission |
1.0 Kappa Turbo GDi Petrol | 88.3 kW (120 PS) / 6 000 r/min | 172 Nm (17.5 kgm) / 1 500 - 4000 r/min | 7-speed (DCT) |
இப்பிரிவிலுள்ள வேறுபிற காம்பேக்ட் எஸ்யுவிக்களைப் போலல்லாமல் ஒரு உற்சாகமூட்டும் ஸ்போர்ட்டியான எஸ்யுவி அனுபவத்தை தருவதற்காக ஹுண்டாய் வென்யூ N Line உருவாக்கப்பட்டிருக்கிறது. உயர்வேகத்திலும் நிலைப்புத்தன்மை மற்றும் மேம்படுத்தப்பட்டிருக்கும் சவாரி தரம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கெனவே, 4 டிஸ்க் பிரேக்குகள், எக்ஸாஸ்ட் சத்தம், ஸ்டீயரிங் மற்றும் சஸ்பென்ஷனுக்கு குறிப்பிட்ட டியூனிங் ஆகிய அம்சங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
ப்ளூ லிங்க் உடன் கூடிய 20.32 செ.மீ (8") HD இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம், ஸ்மார்ட் போன் பிணைப்புத்திறனை வழங்குவதோடு, எண்ணற்ற தகவல்களை நீங்கள் அணுகிப் பெறுவதை சாத்தியமாக்குகிறது. 60-க்கும் அதிகமான ஹுண்டாய் ப்ளூலிங்க் கனெக்டட் கார் அம்சங்களின் தொகுப்பு, உங்கள் இணைப்புத்திறனுள்ள கார் அனுபவத்தை நிச்சயம் உயர்த்தும். பாதுகாப்பு, அமைவிடம் அடிப்படையிலான சேவைகள், நேவிகேஷன் நிகழ்நிலைத் தகவல்கள், ரிமோட் சேவைகள், வாகன டயக்னாஸ்டிக்ஸ் மற்றும் வாய்ஸ் அசிஸ்டெண்ட்ஸ் ஆகியவை உட்பட, பல்வேறு செயல்பாடுகளை வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளலாம்.
ஒவ்வொரு டிரைவ் அனுபவத்தையும் பதிவு செய்வதை ஏதுவாக்க, இப்பிரிவில் முதன்முறையாக இரட்டைக் கேமராவுடன் கூடிய டேஷ்காம் ஹுண்டாய் வென்யூ N Line - ல் இடம்பெறுகிறது. மகிழ்ச்சியான மற்றும் உற்சாகமூட்டும் தருணங்களை இதன்மூலம் வாடிக்கையாளர்கள் பயணிக்கும்போதே பதிவுசெய்ய இயலும். எல்சிடி டிஸ்பிளே, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் இணைப்புத்திறன், போட்டோ / டைம் – லேப்ஸ் / வீடியோ விருப்பத்தேர்வுகள் மற்றும் அவசரநிலை பதிவிடும் அம்சம் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.
ஸ்போர்ட்டியான, அதே வேளையில், சமநிலை கொண்ட இயக்கத்தை சாத்தியமாக்க 30-க்கும் அதிகமான பாதுகாப்பு அம்சங்களை ஹுண்டாய் வழங்குகிறது. இவற்றுள் 20+ பாதுகாப்பு அம்சங்கள் ஸ்டான்டர்டு இணைப்பாக கிடைக்கின்றன. அனைத்து 4 டிஸ்க் பிரேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், வெஹிக்கிள் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மெண்ட், இரட்டை ஏர் பேக்குகள், ரியர் பார்க்கிங் கேமரா, ISOFIX, ஹெட்லேம்ப் எஸ்கார்ட் ஃபங்ஷன், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், EBD உடன் ABS ஆகியவை இந்த பாதுகாப்பு அம்சங்களுள் சிலவாகும்.
வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட வசதிகளை வழங்குவதற்கென ஸ்மார்ட் எலக்ட்ரிக் சன்ரூஃப், புஷ் பட்டன் ஸ்டார்ட் / ஸ்டாப், டிஜிட்டல் டிஸ்பிளே உடன் முழுமையான தானியக்க ஏசி, படில் லேம்ப்ஸ், ரியர் ஏசி வெண்ட்கள், வயர்லெஸ் போன் சார்ஜர், க்ளோபாக்ஸ் கூலிங், க்ரூஸ் கண்ட்ரோல், முன்புற யுஎஸ்பி சார்ஜர் மற்றும் பின்புற யுஎஸ்பி சார்ஜர் ஆகியவற்றை ஹுண்டாய் வென்யூ N Line கொண்டிருக்கிறது.
7 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட வாரண்ட்டி விருப்பத்தேர்வு, 3 ஆண்டுகள் இலவச சாலையோர சர்வீஸ் உதவி, 3 ஆண்டுகளுக்கான – ப்ளூ லிங்க் சந்தா மற்றும் 5 ஆண்டுகளுக்கு ஹுண்டாய் நம்பிக்கை, கவனிப்பு மற்றும் பராமரிப்பு தொகுப்புகள் ஆகியவற்றின் மூலம் முழுமையான மனநிம்மதியை வாடிக்கையாளர்களுக்கு ஹுண்டாய் வென்யூ N Line வழங்கும்.
2 மோனோடோன் வண்ண விருப்பத்தேர்வுகளுடன் (ஷேடோ கிரே மற்றும் போலார் ஒயிட்) ஹுண்டாய் வென்யூ N Line வழங்கப்படும். அத்துடன், N Line பிரத்யேக அம்சமாக 3 இரட்டை வண்ண விருப்பத்தேர்வுகளும் கிடைக்கும்:
சிறப்பான பாதுகாப்பு அம்சங்கள், அற்புதமான செயல்திறன், கம்பீரமான வடிவமைப்பு, ப்ளூலிங்க் இணைப்பு வசதிகள், மனநிம்மதியை உறுதிசெய்யும் பல அம்சங்கள் என இதுவரை கிடைக்கப்பெறாத, நிகரற்ற பல அம்சங்களை உள்ளடக்கிய ஹுண்டாய் வென்யூ N Line இந்தியச் சந்தையில் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் புதிய பாதையை படைக்கும் என்பது நிச்சயம்.
HMIL குறித்து
ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) என்பது ஹுண்டாய் மோட்டார் கம்பெனிக்கு (HMC) முற்றிலும் சொந்தமான ஒரு துணை நிறுவனமாகும். இந்தியாவில் தொடங்கப்பட்ட நாளிலிருந்தே கார் ஏற்றுமதியில் முதலிடத்தை வகித்து வரும் ஹுண்டாய், இந்தியாவின் முதல் ஸ்மார்ட் மொபிலிட்டி தீர்வுகளை வழங்கும் நிறுவனமாகவும் திகழ்கிறது. தற்போது கிராண்டு i10 நியோஸ், ஆல் நியூ i20, i20 N Line, ஆரா, வென்யூ, ஸ்பிரிட்டட் நியூ வெர்னா, ஆல் நியூ கிரேட்டா, அல்கஸார், நியூ டக்ஸன் மற்றும் கோனா எலக்ட்ரிக் என்ற 10 மாடல்களில் கார்களை தயாரித்து இது வழங்கி வருகிறது. சென்னை அருகே உள்ள HMIL-ன் ஒருங்கிணைந்த அதிநவீன தயாரிப்பு தொழிற்சாலையில் அதிநவீன உற்பத்தி, தர மற்றும் பரிசோதனை வசதிகள் உள்ளன.