பெண்ணுக்கு கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை

செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

Update: 2023-05-25 20:05 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 46 வயதான பெண்ணுக்கு கர்ப்பப்பையில் 2½ கிலோ கட்டி இருந்தது. இதையடுத்து அந்த பெண்ணுக்கு செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பப்பையுடன் கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

முன்னதாக மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா ஆய்வு பணிக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தபோது, அவரும் மருத்துவ குழுவினருடன் இணைந்து இந்த அறுவை சிகிச்சையை செய்தார்.

இதுகுறித்து செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் ராேஜஷ் கண்ணன் கூறுகையில், ''செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் முதன் முறையாக பெண்ணுக்கு கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை நடந்தது. அந்த பெண் நலமாக உள்ளார். அரசு ஆஸ்பத்திரியில் இதுபோன்ற சிகிச்சைகளை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்