கூரை வீடு எரிந்து நாசம்

கோட்டூர் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் கூரை வீடு எரிந்து நாசமடைந்தது. இதில் ரூ.1 லட்சம் பொருட்கள் சேதமடைந்தன.

Update: 2023-04-10 19:15 GMT

கோட்டூர்;

கோட்டூர் புதுத்தெருவை சேர்ந்தவர் தமிழரசன் (வயது35). இவர் குடும்பத்தோடு கூரை வீட்டில் வசித்து வந்தார். இவரது மனைவி நேற்று மதியம் கியாஸ் அடுப்பின் அருகே விறகுஅடுப்பில் சமையல் செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக கியாஸ் சிலிண்டரில் தீப்பிடித்து, வெடித்து சிதறியது, இதில் கூரை வீ்டு முற்றிலும் எரிந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமடைந்தன. இது குறித்து தகவல் அறிந்த கோட்டூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிலிண்டரில் தீப்பிடித்த உடன் வீட்டில் உள்ள அனைவரும் ெவளியே சென்று விட்டதால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்