மனைவி நோயால் அவதிப்படுவதை தாங்க முடியாமல் கணவன் தற்கொலை

மனைவி நோயால் அவதிப்படுவதை தாங்க முடியாமல் கணவன் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-11-09 18:45 GMT

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைபிள்ளை(வயது 60). இவரது மனைவி மலர். மகன் மற்றும் பேரப்பிள்ளைகள் என குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவிக்கு புற்றுநோய் உள்ளதால் அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார். இதனை தாங்கிக்கொள்ள முடியாமல் பிச்சைபிள்ளை தினமும் புலம்பி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மனஉளைச்சலில் இருந்த அவர் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு அப்பகுதியில் உள்ள ஒரு ஆலமரத்துக்கு அருகே மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்