மனுநீதி முகாம்

வாசுதேவநல்லூர் அருகே மனுநீதி முகாம் நடந்தது.;

Update: 2023-01-31 18:45 GMT

வாசுதேவநல்லூர்:

சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் யூனியன் திருமலாபுரம் என்ற அருளாட்சி கிராமத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி நடைபெற்ற முன்னோடி மனு நீதி நாள் முகாமில் 193 மனுக்கள் பெறப்பட்டது. இவற்றில் 108 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதி உள்ள 85 மனுக்களுக்கு பதிலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

வாசுதேவநல்லூர் அருகே தலையணையில் உள்ள பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் மனு நீதிநாள் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி மரக்கன்றுகளை நட்டு வைத்து தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் யூனியன் தலைவர் பொன். முத்தையாபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் சந்திர லீலா, திருமலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் மாப்பிள்ளைத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவகிரி தாசில்தார் செல்வக்குமார் வரவேற்றார். வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலை குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மனுநீதி நாள் முகாமில்.தோட்டக்கலை, வேளாண்மை துறை சார்பில் 172 பயனாளிகளுக்கு ரூ.14,54,315 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முடிவில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சாந்தி நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்