ரூ.1 கோடியே 11 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்
ராமேசுவரம் கோவிலில் ரூ.1 கோடியே 11 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் உண்டியல்கள் திறந்து எண்ணி கணக்கிட்டதில் ரொக்கம் ரூ.1 கோடியே 11 லட்சத்து 53 ஆயிரத்து 571, தங்கம் 75 கிராம் 400 மில்லி கிராம், வெள்ளி 2 கிலோ 300 கிராம் இருந்தது.உண்டியல்கள் திறப்பின்போது திருக்கோவில் துணை ஆணையர் மாரியப்பன், பரமக்குடி உதவி ஆணையர் ஞானசேகரன், மேலாளர் மாரியப்பன், சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், நேர்முக உதவியாளர் கமலநாதன், செல்லம் மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.