மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி?

மின்சாத்தை சிக்கனமாக பயன்படுத்தவது எப்படி? என வேதாரண்யம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2023-01-01 18:45 GMT

வேதாரண்யம்:

மின்சாத்தை சிக்கனமாக பயன்படுத்தவது எப்படி? என வேதாரண்யம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குறைவான மின்சாரம்

வீடுகளில் எலக்ட்ரானிக் சோக்குடன் கூடிய மெல்லிய குழல் விளக்குகள், சி.எப்.எல். விளக்குகள், எல்.இ.டி. விளக்குகளை பயன்படுத்த வேண்டும். இதனால் குறைவான மின்சாரம் மட்டுமே பயன்படும். மேலும் மின் விளக்குகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். ஒரு போதும் குண்டு பல்புகளை பயன்படுத்தக்கூடாது.

மின்விசிறியை பயன் படுத்தும் போது குறைந்த எடையுள்ளதாக பார்த்து கொள்ள வேண்டும். மின்விசிறி பிளேடுகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

கட்டணம் குறையும்

பேரிங்குகளுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் உராய்வு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எலக்ட்ரானிக் ரெகுலேட்டரை பயன்படுத்துவதன் மூலம் துள்ளியமாக இயக்க முடியும்.தேவையில்லாத இடத்தில் மின்விளக்குகள் எரிவது, மின்விசிறிகள் சுற்றி கொண்டிருப்பது தவிர்க்க வேண்டும்.

இதன் காரணமாக மின்கட்டணம் குறையும். குளிர்சாதன பெட்டியை பயன்படுத்தும் போது அடிக்கடி திறந்து மூடுவதை தவிர்ப்பது மூலமும். உணவு பொருள் முழுவதுமாக ஆறிய பிறகு உள்ளே வைக்க வேண்டும்

சலவை எந்திரம்

சுவற்றிற்கும் குளிர் சாதனப் பெட்டிக்கும் 200 எம்.எம். இடைவெளி இருக்க வேண்டும். சரியான அளவிலான ஐ.எஸ்.ஐ. வயர்களை பயன்படுத்த வேண்டும்.

சலவை எந்திரத்தை பயன்படுத்தும் போதும் சூரிய ஒளி இருக்கும் போது உலர வைக்க கூடாது. பம்ப் செட் மோட்டார்களில் கண்டிப்பாக கெப்பாசிட்டர் பொருத்த வேண்டும்.

வீடுகட்டும் போது வெளிச்சமும், காற்றும் கிடைக்குமாறு கட்ட வேண்டும்.கிரைண்டரை பயன் படுத்தும் போது நைலான் பெல்ட்டை பயன்படுத்த வேண்டும்.

ஸ்டார் குறியீடு

மிக்சி கிரைண்டர், பம்ப் மோட்டார், குளிர் சாதனப் பெட்டி மோட்டார்களை ரீவைன்ட் செய்வதை தவிர்க்க வேண்டும். மின்சாதனங்களை வாங்கும் போது ஸ்டார் குறியீடு கொண்டதை வாங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்