மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்

கோவில் இடங்களில் நீண்டகாலம் வசித்து வரும் மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என விவசாய தொழிலாளர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-01-29 18:45 GMT

கோட்டூர்,ஜன.30-

கோவில் இடங்களில் நீண்டகாலம் வசித்து வரும் மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என விவசாய தொழிலாளர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநாடு

திருத்துறைப்பூண்டியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட மாநாடு நடந்தது.. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் கலைமணி தலைமை தாங்கினார். மூத்த தலைவர் தங்கராசு கொடியேற்றி வைத்தார். மாநில பொருளாளர் சங்கர் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் பேசினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

முதியோர் உதவித்தொகை

விவசாயத் தொழிலாளிகளுக்கு தனித்துறை உருவாக்க வேண்டும். பல முதியோர்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.முதியோர் உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். அனைத்து கிராமங்களிலும் 100 நாள் வேலை திட்டத்தை தொடங்க வேண்டும்.

கோவில் மனை, அறக்கட்டளை இடங்களில் நீண்ட காலமாக குடியிருந்து வரும் மக்களுக்கு வீட்டுமனைபட்டா வழங்க வேண்டும்.

மாற்று இடம் வழங்க வேண்டும்

நீர்நிலைகளை காரணம் காட்டி ஏழை மக்களை வெளியேற்றக் கூடாது.அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். திருவாரூரில் இயங்கி வரும் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளை தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை செய்கின்றனர். திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனைத்து உபகரணங்களையும் வழங்கி முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் கந்தசாமி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்