மனுநீதிநாள் முகாமில் 17 பேருக்கு வீட்டுமனை பட்டா

திசையன்விளையில் மனுநீதிநாள் முகாமில் 17 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

Update: 2023-05-28 19:33 GMT

திசையன்விளை:

திசையன்விளை தாலுகா அலுவலகத்தில் மனுநீதிநாள் சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது ஷபீர் ஆலம் தலைமையில் நடந்தது. பயிற்சி துணை கலெக்டர் ஷூஜா முன்னிலை வகித்தார். திசையன்விளை தாசில்தார் முருகன் வரவேற்று பேசினார். முன்னோடி மனுநீதி நாளில் பெறப்பட்ட 275 மனுக்கள் தீர்வு காணப்பட்டு, 17 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை உதவி கலெக்டர் முகமது ஷபீர் ஆலம் வழங்கினார்.

விழாவில் திசையன்விளை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பத்மபிரியா, உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் தாஸ் பிரியன், தலைமை எழுத்தர் குமார், துணை தாசில்தார்கள் ரமேஷ்குமார், நக்கீரன், வருவாய் ஆய்வாளர் மகேந்திரன், கிராம நிர்வாக அலுவலர்கள் குமார், ஆயூப் கான், இசக்கியப்பன், ஜேம்ஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்