கெடார் அருகேபட்டபகலில் வீடு புகுந்து பணம் திருட்டு
கெடார் அருகே பட்டபகலில் வீடு புகுந்து பணத்தை மா்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனா்.;
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி தாலுகா கெடார் அருகே உள்ள சிறுவாலை கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (வயது 38). இவரது தாய் யசோதை(60). இவர்கள் இவரும் நேற்று வீட்டை பூட்டிவிட்டு, போரூர் சத்திரம் கிரமத்தில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் மதியம் 12 மணிக்கு வீடு திரும்பினார்கள். அப்போது, வீட்டின் கதவு திறந்து கிடப்பது கண்டு, பாக்கியலட்சுமி சத்தம் போட்டார். உடன் வீட்டுக்குள் இருந்து ஒருவர் வேகமாக ஓடி வந்து, அங்கு தயார் நிலையில் நின்றிருந்த ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுவிட்டார். இதன் பின்னர், பாக்கியலட்சுமி வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது, பீரோவில் இருந்த ஆயிரம் ரூபாய் திருடு போயிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.