வறண்ட நிலத்தில் வீடு கட்ட இடம் வழங்க வேண்டும்
வறண்ட நிலத்தில் வீடு கட்ட இடம் வழங்க வேண்டும்
திருப்பூர்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. உடுமலை தாலுகா குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடுகபாளையம் ஊராட்சி லிங்கமநாயக்கன்புதூர் கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள், ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், 'நாங்கள் 3 தலைமுறையாக 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். புதிதாக திருமணம் முடிந்தவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 10ஆண்டுகளாக கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறோம். போதுமான வீடு வசதியில்லாமல் சிரமத்தை சந்திக்கிறோம். எங்கள் பகுதிக்கு அருகே கண்ணா நாயக்கர் குளம் உள்ளது. இந்த குளத்துக்கு நீர்வரத்து இல்லாமல் வறண்ட நிலமாக உள்ளது. அந்த இடத்தில் நாங்கள் வீடு கட்டி வசிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. சம்பந்தப்பட்ட இடத்தை கலெக்டர் ஆய்வு செய்து நாங்கள் வசிப்பதற்கு இடம் வழங்கி உதவ வேண்டும்' என்று கூறியுள்ளனர்.