கனமழையால் வீடு இடிந்து விழுந்தது

கனமழையால் வீடு இடிந்து விழுந்தது;

Update: 2022-11-03 20:22 GMT

தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே கொத்தங்குடி உதாரமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் அரும்புகண்ணு (வயது60). இந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அரும்புகண்ணுவின் ஓட்டு வீட்டு சுவர் கனமழை காரணமாக நேற்று இடிந்து விழுந்தது. அந்த சுவர் வெளிப்புறமாக விழுந்ததால் வீட்டில் இருந்த அரும்புகண்ணு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து அறிந்த கொத்தங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பழனி, வீட்டை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதுதொடர்பாக வருவாய்த்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்