வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு
வீடு புகுந்து பெண்ணிடம் நகையை பறித்து சென்றனர்.;
விருதுநகர் அருகே உள்ள புல்லலக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் நாகவள்ளி (வயது 27). இவர் கோவையில் தனது கணவருடன் வசித்து வரும் நிலையில் தீபாவளிக்காக புல்லலக்கோட்டையில் உள்ள தன் தாயார் வீட்டுக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு வீட்டு கதவைப்பூட்டாமல் சாத்திவிட்டு நாகவள்ளியும், அவர் தாயாரும் தூங்கிக்கொண்டிருந்தபோது நள்ளிரவு 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நாகவள்ளியின் கழுத்தில் கிடந்த தாலி செயினை பறிக்க முயன்றார். அப்போது நாகவள்ளி செயினைபற்றி கொண்டதால் அதில் 2 பவுன் மட்டும் அந்த நபரின் கையில் சிக்கிக் கொண்டது. நாகவள்ளி சத்தம் போடவே அந்த நபர் தப்பி சென்று விட்டார். இதுபற்றிய புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.