வீடு புகுந்து 21 பவுன் நகைகள்- பணம் திருட்டு

தஞ்சை அருகே காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய போது வீடு புகுந்து 21 பவுன் நகைகள்-பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்

Update: 2023-04-20 20:51 GMT

வல்லம்:

தஞ்சை அருகே காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய போது வீடு புகுந்து 21 பவுன் நகைகள்-பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

விவசாயி

தஞ்சை அருகே அற்புதாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செங்கோல் பீட்டர் (வயது51). விவசாயி.இவர் முந்திரி வியாபாரம் செய்து வருகிறார். செங்கோல் பீட்டர் மற்றும் அவருடைய தம்பி குடும்பத்தினர் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செங்கோல் பீட்டர் அவருடைய மனைவி மற்றும் மகன், மகளுடன் காற்று வாங்கி கொண்டு தூங்குவதற்காக வீட்டின் முன்னால் உள்ள போர்டிகோவில் தூங்கிக் கொண்டிருந்தனர். காற்றுக்காக வீட்டின் முன்பக்க கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

21 பவுன் நகைகள்- பணம் திருட்டு

வீட்டின் உள்ளே உள்ள ஒரு அறையில் செங்கோல் பீட்டரின் தம்பி மற்றும் அவருடைய குடும்பத்தினர் தூங்கினர். நேற்று அதிகாலை வீட்டின் வெளியே படுத்திருந்த செங்கோல் பீட்டர் வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்துள்ளது. இதனையடுத்து செங்கோல் பீட்டர் வீட்டின் கதவை தட்டி உள்ளார். இந்த சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த அவருடைய தம்பி குடும்பத்தினர் கதவை திறந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து செங்கோல் பீட்டர் வீட்டின் உள்ளே சென்ற போது வீட்டின் மற்றொரு அறை திறக்கப்பட்டு பீரோ உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனே அவர் பீரோவை பார்த்த போது அதில் இருந்து நெக்லஸ், செயின், மோதிரம், வளையல் உள்பட 21 பவுன் நகைகள், ரூ.27 ஆயிரத்தையும் திருடி விட்டு வீட்டின் முன்பக்க கதவை உள்ளிருந்தவாறு பூட்டி விட்டு பின்பக்க கதவை திறந்து சென்றுள்ளனர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து தகவல் அறிந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா மற்றும் போலீசார் சம்பவம் இடத்துக்கு வந்து திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் திருட்டு நடந்த வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது.

அந்த மோப்ப நாய் திருட்டு நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுதொடர்பாக செங்கோல் பீட்டர் கொடுத்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்