லாரி மோதி விடுதி ஊழியர் பலி

நாகர்கோவிலில் லாரி மோதி விடுதி ஊழியர் பலி

Update: 2023-06-30 18:45 GMT

நாகர்கோவில்

நாகர்கோவில் பள்ளிவிளை பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 51). இவர் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு வந்த சதீஷ்குமார் கோட்டார் போலீஸ் நிலையம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி சதீஷ்குமார் மீது மோதியது. இதில் சதீஷ்குமார் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அந்த பகுதியினர் போலீசாருக்கு தகவல் ெகாடுத்தனர்.

போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயத்துடன் கிடந்த சதீஷ்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான சதீஷ்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு நேற்று அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்