ஸ்ரீவில்லிபுத்தூர்,
மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகியவற்றின் போது மட்டுமே பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இந்தநிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 1 கோடியே 29 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை கொண்டு பக்தர்கள் தங்குவதற்கு 4 தளங்களை கொண்ட தங்கும் விடுதி அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அறிவிப்பை பக்தர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.