தூய்மை பணியாளர்கள் கவுரவிப்பு
கிராமசபை கூட்டத்தில் தூய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்
கடையநல்லூர்:
கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் நயினாரகரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் முத்தையா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சொர்ணம் முன்னிலை வைத்தார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் கலந்துகொண்டு கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு சான்றுகளையும், பொன்னாடைகளையும் அணிவித்து கவுரவித்தார். நிகழ்ச்சியில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் பிரான்சிஸ் மகராஜன், உதவி திட்ட அலுவலர் ஹரி அரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மருத்துவ அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியில் ஊராட்சி செயலர் மாரியப்பன் நன்றி கூறினார்.