சங்ககிரியில் தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு அரசு சார்பில் மரியாதை; கலெக்டர்- எம்.பி.க்கள் பங்கேற்பு
சங்ககிரியில் தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
சங்ககிரி:
சங்ககிரி அருகே ஈரோடு பிரிவு ரோட்டில் சுதந்திர போராட்ட வீரர், தீரன் சின்னமலை நினைவு இல்லத்தில் தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். விழாவில் எம்.பி.க்கள் சின்ராஜ், பார்த்திபன், போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், சங்ககிரி உதவி கலெக்டர் (பொறுப்பு) தணிகாசலம், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, பேரூராட்சி தலைவர் மணிமொழி, தாசில்தார் பானுமதி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் முத்துசாமி, பேரூராட்சி செயல் அலுவலர் சுலைமான்சேட், அட்மா குழு தலைவர் ராஜேஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.