குற்றவாளியை கண்டுபிடிக்க உதவிய சிசிடிவி கேமராவுக்கு மாலை போட்டு மரியாதை... எஸ்.ஐ. செய்த வினோத செயல்..!

குற்றவாளியை கண்டுபிடிக்க உதவிய சிசிடிவி கேமராவுக்கு, காவல்துறை உதவி ஆய்வாளர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.;

Update:2023-03-05 13:26 IST

கடலூர்,

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில், சுந்தரமூர்த்தி என்பவர் கடந்த 27ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த வந்த போலீசார், குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வந்தனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி மூலம் கொலை குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டார்.

இந்நிலையில், கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க உதவிய சிசிடிவி கேமராவுக்கு குறிஞ்சிப்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரசன்னா, இன்று சிசிடிவிக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். சாலையோர தெருவில் இருந்த கேமராவுக்கு ஏணி வைத்து மேலே ஏறி மாலை அணிவித்தார். போலீஸ் அதிகாரியின் இந்த செயல் அப்பகுதியில் விநோதமாக பார்க்கப்பட்டது.



Full View


Tags:    

மேலும் செய்திகள்