இந்தியாவில் மகத்தான 10 ஆண்டுகள் நிறைவை கொண்டாடி மகிழும் ஹோண்டா அமேஸ்

5.3 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களின் பெருமைமிகு சொத்தாக திகழ்கிறது. இந்தியாவில் ஹோண்டாவிற்கு மிக அதிகமாக விற்பனையாகும் மாடலாக பங்களிப்பை அமேஸ் தற்போது வழங்குகிறது

Update: 2023-04-07 04:51 GMT

புதுடெல்லி,

ஏப்ரல் 5, 2023: இந்தியாவில் ப்ரீமியம் கார்கள் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் ஹோண்டா கார்ஸ் இந்தியா (HCIL), அதன் பிரபலமான ஃபேமிலி செடான் காரான ஹோண்டா அமேஸ் - ன் 10வது ஆண்டுவிழாவை பெருமகிழ்ச்சியோடு கொண்டாடுகிறது. 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட இக்கார், விரைவிலேயே ஹோண்டாவின் சிறப்பான விற்பனை மாடலாக உருவெடுத்தது. இன்றைய நாள் வரை இதன் பிரிவிலும் மற்றும் கார் தொழில்துறையிலும் வலுவான சந்தை இருப்பினை இது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகள் காலஅளவின்போது, 5.3 இலட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு ஆனந்தத்தையும், பெருமையையும் அமேஸ் கொண்டு வந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. தற்போது இந்நாட்டில் விற்பனையாகும் ஒவ்வொரு இரண்டு ஹோண்டா கார்களில் ஒன்று ஹோண்டா அமேஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் HCIL – ன் விற்பனையில் 53% பங்கினை அமேஸ் கைவசம் வைத்திருக்கிறது.

மிக நவீன, மேம்பட்ட தயாரிப்புகளையும், சேவைகளையும் முன்கூட்டியே வழங்குவதன் மூலம் தனது வாடிக்கையாளர்கள் மீது ஹோண்டா கொண்டிருக்கும் தளராத பொறுப்புறுதியின் அடிப்படையில், 2013-ம் ஆண்டில் முதன் முதல் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ள அனைத்து ஹோண்டா அமேஸ் கார்களும், E20 மெட்டீரியல்களுக்கு ஒத்திசைவானவை என்பது ஹோண்டாவின் தனித்துவ சிறப்பிற்கு எடுத்துக்காட்டாகும்.

தற்காலத்திய நவீன செடான் காரான ஹோண்டா அமேஸ், செயல்பாடு மற்றும் எரிபொருள் சிக்கனம் ஆகிய இரண்டின் மிக நேர்த்தியான சமநிலை ஆதாயத்தை வழங்குகிறது. மேம்பட்ட பவர்ட்ரெய்ன், பார்ப்பவர்களை ஈர்க்கும் திடகாத்திர வடிவமைப்பு, நவீனமான, இடவசதிமிக்க உட்புற அம்சங்கள், பிரமாதமான டிரைவிங் செயல்திறன், மேம்பட்ட அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் என ஹோண்டாவின் சிறப்பான பல அம்சங்களை அமேஸ் கொண்டிருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகள் காலஅளவின்போது இரண்டு ஜெனரேஷன்கள் மற்றும் பல்வேறு பிற நிகழ்நிலை மேம்பாடுகள் உட்பட, பல தரமுயர்த்தல் செயல்பாடுகளை இந்த மாடல் கண்டிருக்கிறது. தனிப்பட்ட கார்களை வாங்கும் நபர்கள் மத்தியில் சிறப்பாக விற்பனையாகும் செடான்களுள் ஒன்றான அமேஸ், முதன்முறையாக கார்களை வாங்கும் தரப்பினர் மற்றும் சிறிய கார்களிலிருந்து, மேம்பட்ட தரத்திலான காரை வாங்க விரும்பும் நபர்கள் என்ற இருதரப்பினரையும் வலுவாக ஈர்க்கிறது.

ஹோண்டா அமேஸ் - ன் வெற்றிகரமான 10 ஆண்டுகள் பயண சாதனை மீது தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் - ன் தலைவர் & தலைமை செயல் அலுவலர் திரு. டகுயா சுமுரா கூறியதாவது: 'இந்தியச் சந்தையில் 5.3 இலட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் 10 ஆண்டுகளை ஹோண்டா அமேஸ் நிறைவு செய்திருக்கும் இன்றைய தினம் எமது இந்திய பயணத்தில் ஒரு சாதனை மைல்கல்லைக் குறிக்கிறது. 'செடான் அனுபவத்திற்கும் ஒரு படி மேலே' என்பதனை எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் எமது தயாரிப்பு அணிவரிசையில் முக்கியமான ப்ரீமியம் தொடக்கநிலை மாடலாக இது திகழ்கிறது.

வலுவான பிராண்டு ஈர்ப்பு, திடகாத்திரமான ஸ்டைலிங், மிக நேர்த்தியான செயல்திறன், நீண்டகாலம் உழைக்கும் ஆற்றல், தரமான கட்டுமானம், பாதுகாப்பு மற்றும் சௌகரியமான அனுபவம் என இதன் பல்வேறு அம்சங்கள் இதன் வரவேற்பிற்கு காரணமாக இருந்திருக்கின்றன. எமது இந்திய பிசினஸ் செயல்பாட்டிற்கு கணிசமான பங்களிப்பை அமேஸ் வழங்கி வருவது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எமது கார்களின் அணிவரிசையில் அதிகமாக விற்பனையாகும் சிறந்த மாடலாக இது

உருவெடுத்திருக்கிறது. முதல் முறையாக கார்களை வாங்குபவர்களில் 40 விழுக்காட்டை அமேஸ் பெறுகிறது. மேம்பட்ட சிவிடி ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களுக்கு வாடிக்கையாளர்களிடம் அதிக விருப்பம் காணப்படுவதை இது வெளிப்படுத்தியிருக்கிறது. தற்போது விற்பனையாகும் மாடலில் ஏறக்குறைய 35% சிவிடி ஆட்டோமேட்டிக் வேரியண்ட் என்ற தரவு இதனை உறுதிசெய்கிறது.'

2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஜெனரேஷன் ஹோண்டா அமேஸ், 2018 மார்ச் மாதம் வரை 2.6 இலட்சம் கார்களை விற்றிருக்கிறது. 2018 மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து 2வது தலைமுறை ஹோண்டா அமேஸ், இதுவரை 2.7 இலட்சம் கார்களை விற்பனை செய்து இந்நாட்டில் மிகப்பிரபலமான பிராண்டுகளில் ஒன்றாக இதனை நிலைநிறுத்தியிருக்கிறது.

ஹோண்டா அமேஸ் செடான், ராஜஸ்தானில் அமைந்துள்ள ஹோண்டாவின் டகுபாரா தயாரிப்பு தொழிலகத்தில் இந்தியாவில் மட்டும் பிரத்யேகமாக தயாரிக்கப்படுகிறது. உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் ஆகிய இருதரப்பு தேவைகளையும் இத்தொழிலகமே பூர்த்தி செய்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற ஹோண்டா அமேஸ், தென்னாப்பிரிக்காவிற்கும், சார்க் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவெங்கிலும் 236 நகரங்களில் 325 விற்பனை மற்றும் சேவை அமைவிடங்களின் ஒரு வலுவான வலையமைப்பை பெற்றிருக்கும் அமேஸ், 2 மற்றும் 3வது அடுக்கு சந்தைகளில் மிகப்பிரபலமாக திகழ்கிறது. இந்த மாடலின் விற்பனையில் 60%, இச்சந்தைகளில் தான் நிகழ்கிறது.

90PS@6000 rpm ஆற்றல் மற்றும் 110 Nm@4800 rpm டார்க் -ஐ வழங்கும் 1.2L i-VTEC பெட்ரோல் இன்ஜின் - ன் மூலம் ஆற்றல் பெறும் அமேஸ், 5 வேகங்களைக் கொண்ட மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது சிவிடி (தொடர்ச்சியாக மாறக்கூடிய டிரான்ஸ்மிஷன்) உடன் இணைக்கப்பட்டு முறையே 18.6 kmpl மற்றும் 18.3 kmpl என்ற மைலேஜை வழங்குகிறது.

3 ஆண்டுகள் வரம்பற்ற கி.மீ. வாரண்ட்டி மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு ஆகியவற்றின் மூலம் மனநிம்மதியை வழங்கும் சர்வீஸ் செயல்திட்டங்கள், ஹோண்டா அமேஸ் - ஐ வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் பரிசீலனை செய்யும் கூடுதலாக, வலுவான ஈர்ப்பு அம்சங்களாக இருந்து வந்திருக்கின்றன. இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ள அனைத்து ஹோண்டா அமேஸ் கார்களும் E20 மெட்டீரியல் இசைவானவை. இதனால், காரில் எந்தவொரு பாகத்தையும் மாற்றுவதற்கான அவசியமின்றி தங்களது தற்போதைய ஹோண்டா அமேஸ் காரில் E20 எரிபொருளின் புதிய கிரேடை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹோண்டா அமேஸ், ஆப்ரிக்கா விற்பனை செயல்திட்டதிற்காக பாதுகாப்பான கார்கள் என்பதன் கீழ், 2019-ம் ஆண்டில் ஆப்ரிக்கா நாடுகளுக்கான வேரியண்ட் கிராஷ் - டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது, குளோபல் NCAP – யிடமிருந்து சிறப்பான 4 - ஸ்டார் பாதுகாப்பு தரநிலையை பெற்றது.

ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் குறித்து

இந்தியாவில் ப்ரீமியம் கார்களின் முன்னணி தயாரிப்பாளரான ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (HCIL), ஹோண்டாவின் பயணியர் கார் மாடல்கள் மற்றும் தொழில்நுட்பங்களை இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது என்ற பொறுப்புறுதியுடன் 1995-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறுவப்பட்டது. HCIL – ன் கார்ப்பரேட் அலுவலகம் உத்திரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவிலும் மற்றும் இதன் மிக நவீன உற்பத்தி தொழிலகம் ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் தபுகாரா என்ற இடத்திலும் அமைந்துள்ளன.

மேம்பட்ட வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்துடன் வலுவான பிணைப்பைக் கொண்டிருக்கும் ஹோண்டாவின் மாடல்கள், நிலைப்புத்தன்மை, நம்பகத்தன்மை, பாதுகாப்பு மற்றும் எரிபொருள் சிக்கனம் என்ற நிரூபிக்கப்பட்ட கூடுதல் தரநிலைகளையும் கொண்டிருக்கின்றன. நாடெங்கிலும் பரந்து விரிந்திருக்கும் வலுவான விற்பனை மற்றும் வினியோக வலையமைப்பும் இந்நிறுவனத்திடம் இருக்கிறது.

புதிய கார் பிசினஸ் தவிர, ஹோண்டா ஆட்டோ டெரஸ் என்ற தனது பிசினஸ் பிரிவின் வழியாக பழைய கார்களை வாங்குவதற்கும், விற்பதற்கும் ஒற்றை நிறுத்த தீர்வையும் ஹோண்டா வழங்குகிறது. ஹோண்டாவின் சான்றளிக்கப்பட்ட பழைய கார்கள், நாடெங்கிலும் உள்ள இத்தகைய கார் வாங்குனர்களின் மாறுபட்ட மற்றும் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்திசெய்து தரஉத்தரவாதத்தையும், மனநிம்மதியையும் ஒருங்கிணைத்து தருவதாக விற்பனை செய்யப்படுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்