இல்லம் தேடி கல்வி திட்ட கண்காட்சி அரங்கு

இல்லம் தேடி கல்வி திட்ட கண்காட்சி அரங்கினை பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி பார்வையிட்டார்.

Update: 2022-11-21 19:47 GMT

விருதுநகரில் நடைபெறும் புத்தகத்திருவிழாவில் பள்ளிக்கல்வித்துறையின் இல்லம் தேடி கல்வி திட்டம் சார்பில் கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் ஜெயகுமார் ஞானராஜ் தலைமையில் மாணவர்கள் பயன்படுத்தும் கற்பித்தல் உபகரணங்களை காட்சிப்படுத்தியிருந்தார். இதில் உலகம் வெப்பமயமாதல், நெகிழி பயன்பாட்டின் தீமைகள், கழிவு நீரை சுத்திகரிக்கும்முறை, பகல், இரவு ஏற்படும் முறை, பருவ காலநிலை மனித உடல் இயக்கம், ஆற்றல் மாற்றங்கள், நடக்கும் ரோபோ என பல்வேறு வகை மாதிரிகள் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த கண்காட்சி அரங்கினை தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி பார்வையிட்டார். பின்னர் அவர் கண்காட்சி அரங்கினை அமைத்துள்ள தன்னார்வலர்களையும் பாராட்டினார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, சிவகாசி மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) பெருமாள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் திட்ட அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்