முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சிங்கப்பூர் உள்துறை மந்திரி சந்திப்பு...!

சிங்கப்பூர் சென்றிருந்த போது தான் விடுத்த அழைப்பை ஏற்று தன்னை சந்தித்தாக முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-11 14:06 GMT

சென்னை,

சிங்கப்பூர் சட்டம் மற்றும் உள்துறை மந்திரி கே.சண்முகம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தார். சிங்கப்பூர் சென்றிருந்த போது தான் விடுத்த அழைப்பை ஏற்று தன்னை சந்தித்தாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் அந்த பதிவில், 'மாண்புமிகு சிங்கப்பூர் சட்டம் மற்றும் உள்துறை மந்திரி திரு. கே.சண்முகம் அவர்களை எனது இல்லத்திற்கு வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எனது கடைசி சிங்கப்பூர் பயணத்தின் போது விடுக்கப்பட்ட எனது அழைப்பை ஏற்று உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக தமிழகத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் இன்று என்னை சந்தித்தார்.

உலக முதலீட்டார்கள் மாநாட்டின் வெற்றியைத் தொடர்ந்து, கல்வி, கலாச்சாரம் மற்றும் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான ஒரு வாக்குறுதியாக இந்த சந்திப்பு உள்ளது.

எங்களது விவாதங்கள் இந்தியா மற்றும் தமிழகத்தின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை அளிக்கும் வகையில், பலனளிக்கும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்' என்று பதிவிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்