வீட்டில் நகை திருட்டு
திருக்குறுங்குடியில் வீட்டில் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
ஏர்வாடி:
திருக்குறுங்குடி வடக்கு மாடத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜன் (வயது 66). இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்ததில் மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த தங்க நகைகள் சிலவற்றையும், வீட்டில் இருந்த வெள்ளி, பித்தளை பாத்திரங்களையும் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுபற்றி அவர் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.