வீட்டில் சாராயம் காய்ச்சியவர் கைது

கோவை அருகே வீட்டில் சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-11-28 18:45 GMT

போத்தனூர்

கோவை எட்டிமடை கம்பர் வீதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது47). கூலி தொழிலாளி. இந்தநிலையில் வெள்ளியங்கிரி வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சி வருவதாக க.க.சாவடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் ஆய்வு செய்த போது சமையல் செய்ய வைத்திருந்த விறகு அடுப்பில் வைத்து சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 1 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் வெள்ளியங்கிரயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்