தேவதானப்பட்டி அருகே வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள்
தேவதானப்பட்டி அருகே கட்சி நிர்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
அகில இந்திய பசுபதியார் முன்னேற்ற கழகத்தினர், தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை, பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இந்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அக்கட்சி நிர்வாகிகள் சைக்கிள் ஊர்வலம் நடத்த தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் அனுமதி கேட்டனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இருப்பினும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அக்கட்சியின் நிர்வாகிகளை வீட்டுக்காவலில் வைக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, கெங்குவார்பட்டி பகுதியை சேர்ந்த அக்கட்சியின் நிர்வாகிகளை போலீசார் வீட்டுக்காவலில் வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.