ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா
மீனாட்சிப்பட்டி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா நடந்தது.
ஏரல்:
மீனாட்சிபட்டி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியின் 14-வது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி நிறுவனர் டாக்டர் பிரகாஷ் ராஜ்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி தாளாளர் வக்கீல் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார். பண்ணைவிளை சேகர குரு ஜான்வெஸ்லி மாணவர்களுக்கு ஆசி வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதிகள் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டாக்டர்ஸ் வி.விகிரி ஆகியோரின் பேரனும் சுவிஷா குரூப் ஆப் கம்பெனியின் தலைவருமான டாக்டர் சுப்பிரமணியன் சர்மா தலைமை விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் பெங்களூர் பிஷப் காட்டன் மகளிர் பள்ளி முன்னாள் முதல்வர் டாக்டர் ஸ்டெல்லா சாமுவேல் பேசினார். கல்லூரி நிறுவனர் பிரகாஷ் ராஜ்குமார் விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கல்லூரியில் 4 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார். கல்லூரி இயக்குனர் பிரியா பிரகாஷ் ராஜ்குமார் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். கல்லூரி முதல்வர் அருண்மொழி செல்வி ஆண்டறிக்கை வாசித்தார். இந்தியன் டென்டல் அசோசியேஷன் தலைவர் டாக்டர் அருண்குமார் பங்கேற்று பேசினார். விழாவில் கல்லூரி டீன் டாக்டர் சாம்சங் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.