புனித தோமையார் ஆலய திருவிழா

வத்தலக்குண்டுவில் புனித தோமையார் ஆலய திருவிழா நடந்தது.;

Update: 2023-07-09 20:00 GMT

வத்தலக்குண்டுவில் புனித தோமையார் ஆலய திருவிழா நடந்தது.இதையொட்டி தினமும் சிறப்பு திருப்பலி, ஆராதனை நடைபெற்றது. விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம் வட்டார பங்கு தந்தை எட்வர்ட் பிரான்சிஸ், அருட்தந்தை பால்ராஜ், உதவி பங்குத்தந்தை ஜான் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி, ஆராதனைகள் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து புனித தோமையாரின் திருஉருவ சிலையுடன் மின் தேர் பவனி நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். இந்த தேர்பவனி வாண வேடிக்கை முழங்க நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. விழாவில் வத்தலக்குண்டு மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்