புனித ஜெபமாலை மாதா தேர்பவனி

புனித ஜெபமாலை மாதா தேர்பவனி நடைபெற்றது.;

Update:2022-11-02 00:18 IST

இலுப்பூர் புனித அந்தோணியார் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் புனித ஜெபமாலை மாதாவின் தேர்பவனி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் 31-ந்தேதி வரை ஒவ்வொரு நாளும் மாலை மாதாவின் ஜெப வழிபாடு நடைபெற்றது. இதனையடுத்து புனித அந்தோணியார் ஆலயத்தில் மாதாவின் ஜெப வழிபாடும், அதனை தொடர்ந்து மாதாவின் சொரூபம் தாங்கிய தேர்பவனியும் நடைெபற்றது.

இதில் திரளானவர்கள் கலந்துகொண்டு மாதாவின் பாடல் பாடியும், ஜெபம் செய்தும் மாதாவின் மன்றாட்டை கூறியும் வழிபட்டனர். மேலும் பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், சாம்பிராணி காண்பித்து, மாலை அணிவித்தும் தங்களது வழிபாட்டை நிறைவேற்றினர்.தொடர்ந்து இலுப்பூர் பங்குத்தந்தை அருட்பணி ஆரோக்கியராஜ் தலைமையில் சிறப்பு பாடல் திருப்பலி நடைபெற்றது. திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள், அருட்சகோதரிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்