புனித வியாகுல அன்னை ஆலய தேர்பவனி

இலுப்பூர் புனித வியாகுல அன்னை ஆலய தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.;

Update: 2022-08-07 17:56 GMT

அன்னவாசல்:

தேர்பவனி

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் புனித வியாகுல அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு பங்குத் தந்தைகள் கலந்துகொண்டு திருப்பலி நிறைவேற்றினர். விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நேற்று  இரவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து நள்ளிரவில் வண்ண மலர் தோரணங்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர் ஊரின் முக்கிய பகுதிகளின் வழியாக பவனி வந்தது.

மெழுகுவர்த்தி ஏற்றி

அப்போது ஒவ்வொரு வீதிகளில் உள்ள குடும்பத்தினரும் தங்கள் வீடு அருகே தேர் வலம் வரும் பொழுது மெழுகுவர்த்தி, மாலை, சாம்பிராணி ஆகியவற்றை காண்பித்து புனித வியாகுல அன்னையை பிரார்த்தித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள திரளானவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர். அதனை தொடர்ந்து நேற்று அருட்பணி ஆரோக்கியராஜ் பங்குத்தந்தை தலைமையில் கூட்டு பாடல் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்