ஹோலி பண்டிகை: நாகர்கோவில்-சென்னை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்
கன்னியாகுமரி-புனே எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 35 நிமிடம் தாமதமாக புறப்பட்டு செல்லும்.;
நாகர்கோவில்,
தெற்கு ரெயில்வே சார்பில் ஹோலி பண்டிகையையொட்டி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரெயில் எண்: 06011 தாம்பரம்-நாகர்கோவில் 25-ந்தேதியும், ரெயில் எண்: 06012 நாகர்கோவில்-தாம்பரம் 24-ந்தேதி மற்றும் 31-ந்தேதியும் ரெயில் எண்: 06019 நாகர்கோவில்-சென்னை சென்டிரல் ரெயில் நிலையம், 24-ந்தேதியும், ரெயில் எண்: 06020 சென்னை சென்டிரல்-நாகர்கோவில் 25-ந்தேதியும், ரெயில் எண்: 06067 சென்னை எழும்பூர்-நாகர்கோவில் 28-ந்தேதியும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
ரெயில் எண்: 16382 கன்னியாகுமரி-புனே எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 35 நிமிடம் தாமதமாக புறப்பட்டு செல்லும்.
நாளை ரெயில் எண்: 06777 எர்ணாகுளம்-கொல்லம் எக்ஸ்பிரஸ் மற்றும் ரெயில் எண்: 06778 கொல்லம்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.