இந்து சமய அறநிலையத்துறை கூட்டம்

பாளையங்கோட்டையில் இந்து சமய அறநிலையத்துறை கூட்டம் நடந்தது.;

Update: 2023-06-27 20:34 GMT

இட்டமொழி:

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை நெல்லை மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு கூட்டம் பாளையங்கோட்டை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் வை.க.முருகன் தலைமை தாங்கினார். உதவி ஆணையர் சு.கவிதா முன்னிலை வகித்தார். மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வே.வெயிலப்பன், சமூகை முரளி, மு.மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவின்படி கோவில்களில் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திடவும், சமூகரெங்கபுரத்தில் உள்ள வெங்கடாஜலபதி கோவில், உதயமார்த்தாண்ட விநாயகர் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்