ஆ.ராசாவை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் ஆ.ராசாவை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;

Update:2022-09-20 00:15 IST

சங்கரன்கோவில்:

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா இந்து பெண்களை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியதாக கூறி அவரை கண்டித்து சங்கரன்கோவில் தேரடி திடலில் இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அகில பாரத அய்யப்பா சேவா சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அகில பாரத அய்யப்பா சங்க செயலாளர் கதிர்வேல் ஆறுமுகம், விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் வன்னியராஜன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், சைவ சித்தாந்த பேரவை தலைவர் திருமலைவேலு, சைவ சித்தாந்த சபை தலைவர் சண்முகவேல் ஆவுடையப்பன், பா.ஜனதா கட்சி மாவட்ட வர்த்தக அணி தலைவர் ராஜா, நகர தலைவர் கணேசன் உள்பட பலர் முன்னிலை வைத்தனர்.

தென்னிந்திய செங்குந்த மகாஜன துணைத்தலைவர் மாரிமுத்து, பா.ஜனதா மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், கோமதி அம்பிகை மாத சங்க அமைப்பாளர் பட்டமுத்து, ஆர்.எஸ்.எஸ். மாவட்ட அமைப்பாளர் கோபால் உள்ளிட்ட பலர் கண்டன உரை ஆற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா கட்சி மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் அந்தோணி ராஜ், மகளிர் அணி தலைவி மகேஸ்வரி, இந்து முன்னணி நகர தலைவர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்