இந்து அன்னையர் முன்னணி கூட்டம்

உடன்குடி ஒன்றியம் அம்மன்புரத்தில் இந்து அன்னையர் முன்னணி கூட்டம் நடந்தது.;

Update: 2023-05-07 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி ஒன்றியம் நயினார்பத்து பஞ்சாயத்துக்கு உட்பட்ட அம்மன்புரத்தில் இந்து அன்னையர் முன்னணி நடத்தும் 140-வது வார வழிபாடு நடந்தது. தலைவி சக்திகனி தலைமை தாங்கினர். துணைத் தலைவி செல்வலெட்சுமி, பொதுச்செயலாளர் தங்கேஸ்வரி, இந்து சமய பண்பாட்டு வகுப்பு ஆசிரியர் மலர் வித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து முன்னணி உடன்குடி ஒன்றிய பொதுச்செயலாளர் கேசவன் கலந்துகொண்டு ராமாயணம், மகாபாரதம், இந்துக்கள் ஒற்றுமை பற்றி விரிவாக பேசினார். கூட்டத்தில் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்