இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் 8 மாதமாக பூட்டி கிடக்கும் கோவிலை திறக்க கோரிக்கை

Update: 2022-09-29 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மேல்தணியாலம்பட்டு கிராமத்தில் சுமார் 300 ஆண்டு பழமைவாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற வீரராகவபெருமாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது.

ஆனால் இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் கோவிலை திறக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பொதுமக்கள் மனு கொடுத்தும் கோவிலை திறக்க அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுமார் 8 மாத காலமாக கோவில் திறக்காததை கண்டித்து இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் பரதன் தலைமையில் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கோவிலை திறக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்