இந்து முன்னணி பிரமுகர் கைது

உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசிய இந்து முன்னணி பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-01 18:30 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொன்பரப்பி கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 39). இவர் இந்து முன்னணியில் திருச்சி கோட்ட பொறுப்பாளராக பதவி வகித்து வருகிறார். இந்தநிலையில் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ராஜசேகர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜசேகரை நேற்று கைது செய்தனர். மேலும் இதனை கண்டித்து நேற்று மாலை 5 மணியளவில் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்