இந்து சமுதாய ஒற்றுமை திருவிழா
கழுகுமலையில் இந்து சமுதாய ஒற்றுமை திருவிழா நடந்தது.;
கழுகுமலை:
கழுகுமலை நகர இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்து இந்து சமுதாய ஒற்றுமை திருவிழா நடைபெற்றது. அங்குள்ள காந்தி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி கோபிநாத் கவுடிய மடம் சார்பில் முரளிதரதாஸ் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார். கோட்ட பொறுப்பாளர் ஆறுமுகச்சாமி முன்னிலை வகித்தார். நகர பொறுப்பாளர் அழகுசுப்பிரமணியன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கன்னியாகுமரி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து விநாயகர் ஊர்வலத்தை பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர துணை தலைவர் பிரகாஷ், கிளை பொறுப்பாளர் பொன்னுச்சாமி, நகர பொறுப்பாளர்கள் பாலு, முருகன், முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.