இந்தி திணிப்பு எதிர்ப்பு துண்டு பிரசுரம் வினியோகம்
இந்தி திணிப்பு எதிர்ப்பு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரியில் தி.மு.க. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் விளக்கம் குறித்த துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. சிங்கம்புணரி ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் வடக்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், பேரூராட்சி தலைவரும், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினருமான அம்பலமுத்து, சோமசுந்தரம் ஆகியோர் தலைமை தாங்கினார். நகர அவை தலைவர் சிவக்குமார், நகர செயலாளர் கதிர்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையொட்டி வணிக வளாகங்கள், வாரச்சந்தை வளாகம், பெரிய கடை வீதி திண்டுக்கல்-காரைக்குடி சாலை பகுதியில் வணிகர்கள், பொதுமக்களுக்கு இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய வடக்கு துணை செயலாளர் சிவபுரிசேகர், பேரூராட்சி மன்ற துணை தலைவர் இந்தியன் செந்தில், பிரதிநிதி குடோன்மணி, புகழேந்தி, ஒன்றிய இளைஞரணி மனோகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.