அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் இந்தி தின விழா
அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் இந்தி தின விழா நடைபெற்றது.;
காரைக்குடி,
காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி இந்தி துறை, சிவகங்கை நேரு யுவகேந்திரா, விவேகானந்தா இளைஞர் குழுமம் ஆகியவை சார்பில் இந்தி தின விழா அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி தலைமை தாங்கினார். கல்லூரி இந்தி துறை தலைவர் நாகமுத்துவேல் வரவேற்றார். சிவகங்கை நேரு யுவகேந்திரா இளையோர் ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார் கருத்துரையாற்றினார். முன்னதாக கல்லூரி தமிழ்த்துறை இணை பேராசிரியர் குமார், தொழில் நிர்வாகவியல் இந்தி தின விழா அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.துறை தலைவர் தியாகராஜன், யோகா திறன் வளர்ச்சி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன தலைவர் யோகநாதன், தொழில் நிர்வாகவியல் துறை உதவி பேராசிரியர் ஜானகிதேவி, வேதியியல் துறை உதவி பேராசிரியர் சித்ரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் மாணவி பார்கவி நன்றி கூறினார்.