பொள்ளாச்சி-தாராபுரம் நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி தீவிரம்

பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலை அடிவள்ளி, கொங்கல் நகரம் பகுதிகளில் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2023-03-18 17:58 GMT

பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலை அடிவள்ளி, கொங்கல் நகரம் பகுதிகளில் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

மாநில நெடுஞ்சாலை

பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தாராபுரம் பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு தினமும் காய்கறி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. இதுதவிர குடிமங்கலம் பகுதியில் காற்றாலைகள் அதிக அளவில் நிறுவப்பட்டுள்ள நிலையில் கனரக வாகனங்கள் அதிகமாக சென்று வருகின்றன.

இந்த நெடுஞ்சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூசாரிப்பட்டி பகுதியிலிருந்து விரிவாக்கம் செய்யப்பட்டது. பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலை 7 மீட்டர் அகலத்தில் இருந்து 2.5 மீட்டர் அளவிற்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.

நெரிசல் குறையும்

இருவழிப்பாதை பல வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ள நிலையில் கனரகவாகனங்கள் சரக்கு வாகனங்களின் போக்குவரத்து நெடுஞ்சாலைகளில் அதிகரித்துள்ளது. தற்போது பொள்ளாச்சி தாராபுரம் மாநில நெடுஞ்சாலை அடிவள்ளி, கொங்கல் நகரம் பகுதிகளில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள், கனரக வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி மிக எளிதாக செல்ல முடியும்.

Tags:    

மேலும் செய்திகள்