சூரியகாந்தியில் அதிக மகசூல் பெற வாய்ப்பு

சூரியகாந்தியில் அதிக மகசூல் பெற வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.;

Update:2022-12-27 00:26 IST


சூரியகாந்தியில் அதிக மகசூல் பெற வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

சூரியகாந்தி சாகுபடி

விருதுநகர் மாவட்டத்தில் மானாவாரி விவசாயம் பரவலாக நடந்து வருகிறது. அந்த வகையில் விருதுநகர் அருகே பாலவனத்தம் கிராமத்தில் மானாவாரி பயிர்சாகுபடி நடைபெறும் நிலையில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடி செய்துள்ளனர். இதுதவிர சோளம், பருத்தி, மல்லி ஆகிய பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சூரியகாந்தியை பொருத்தமட்டில் தற்போது பெய்யும் மழையிலேயே பயிர் செழித்து வளரும். மேலும் பனிப்பொழிவிலேயே பயிர் வளர்ந்து விடும் என சூரியகாந்தி சாகுபடி செய்துள்ள விவசாயி பாலகுரு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:- குறைந்த செலவில் பயிர்சாகுபடி செய்து அதிகமகசூல் பெற வாய்ப்புள்ளது.

அதிக மகசூல்

ஒரு ஏக்கருக்கு 2 கிலோ பை விதை வாங்கி விதைத்தால் விதைப்புக்கு ரூ. 2,400 வரை செலவாகும். அதன் பின்னர் பெரிய செலவு ஏதும் இல்லாத நிலையில் எந்திரம் மூலம் அறுவடை செய்யலாம். அறுவடைஎந்திரத்திற்கு 1 மணி நேரத்திற்கு ரூ. 3,500 செலவிட வேண்டும்.

அறுவடை செய்து அப்படியே விதைகளை விற்பனை செய்தால் குவிண்டால் ரூ. 6,500 வரை விற்பனை செய்ய முடியும். நாற்றுப்பயிர் 2 முறை சூரியகாந்தி சாகுபடி செய்தபின் அதனைத்தொடர்ந்து நாற்று பயிராக சோளம், மல்லி ஆகியவற்றை சாகுபடி செய்கிறோம். இதனை தொடர்ந்து அடுத்த முறை மீண்டும் சூரியகாந்தி சாகுபடி செய்கிறோம். சூரியகாந்தி சாகுபடியில் அதிக மகசூல் பெற வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்