சாலை அகலப்படுத்தும் பணி

சாலை அகலப்படுத்தும் பணி;

Update:2022-10-02 16:16 IST

வெள்ளகோவில்

வெள்ளகோவிலில் திருச்சி -கோவை நெடுஞ்சாலையில் எப்பொழுதும் போக்குவரத்து அதிகமாகவே இருக்கும், இந்த சாலை வழியாக ஆன்மீக தலங்களான திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், சீர்காழி, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், மேற்கு மார்க்கமாக திருப்பூர், ஊட்டி, கோயம்புத்தூர், பாலக்காடு போன்ற நகரங்களுக்கு ஏராளமான சுற்றுலா வாகனங்கள், பேருந்துகள், கனரக வாகனங்கள், கல்லூரி வாகனங்கள், கம்பெனிகளுக்கு வேலையாட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று வருகின்றன, நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகமாய் கொண்டிருப்பதால் அதற்கு ஏற்றவாறு நெடுஞ்சாலைத்துறையினர் வாகன போக்குவரத்து கணக்கீடு செய்து அதற்கு ஏற்றார் போல் சாலை விரிவாக்க பணி மேற்கொண்டு வருகின்றனர், அந்த வகையில் தற்போது ஓலப்பாளையம் கடைவீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அகலப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்