தேனி-போடி அகலப்பாதையில் அதிவேக என்ஜின் சோதனை -நாளை இயக்கப்படுகிறது
தேனி-போடி இடையே நாளை (வெள்ளிக்கிழமை) ரெயில் அதிவேக என்ஜினை இயக்கி சோதனை நடத்தப்பட உள்ளது.;
மதுரை கோட்டத்துக்கு உள்பட்ட மதுரை-போடி இடையே அகலப்பாதை பணிகள் நடந்து வந்தது. இதில், மதுரையில் இருந்து தேனி வரையிலான பணிகள் முடிந்து, ரெயில் இயக்கப்படுகிறது. இதற்கிடையே, தற்போது தேனி-போடி இடையேயான 15 கி.மீ. தூர அகலப்பாதை பணிகள் முடிவடைந்துள்ளன. இதற்காக இந்த பாதையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, தேனி-போடி இடையே நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 120 கி.மீ. வேகத்தில் ரெயில் என்ஜினை இயக்கி சோதனை நடத்தப்பட உள்ளது. இந்த அதிவேக சோதனை நடக்கும் போது, அந்த பாதையின் அருகே பொதுமக்கள் செல்லவோ, தண்டவாள பகுதியை கடக்கவோ வேண்டாம் என்று கோட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.