தேங்கும் மழைநீரை வெளியேற்ற நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகள் - வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

Update: 2022-08-25 08:19 GMT

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மாநகரில் உள்ள சுரங்கப்பாதைகளில் தேங்கும் மழைநீர் மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றப்படுகிறது. இதில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் வருகின்ற வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேங்கும் மழைநீரை வெளியேற்ற நிமிடத்திற்கு 4,200 லிட்டர் மழைநீரை வெளியேற்றும் திறன் கொண்ட நீரில் மூழ்கக்கூடிய மோட்டார் பம்பு புதியதாக பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் நிமிடத்திற்கு 7,500 லிட்டர் மழைநீரை வெளியேற்றும் திறனுடன் இருந்த மோட்டார் பம்புகளின் செயல்திறன், தற்போது கூடுதலாக பொருத்தப்பட்ட மோட்டார் பம்பின் மூலம் நிமிடத்திற்கு 11,700 லிட்டர் மழைநீரை வெளியேற்றும் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் மின்தடை ஏற்பட்டால் இந்த மோட்டார் பம்புகளை இயக்க ஏதுவாக 62.5 கிலோ வாட் திறன் கொண்ட ஜெனரேட்டரும் நிறுவப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்