வீர, தீரசெயல் புரிந்தவர்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
வீர, தீரசெயல் புரிந்தவர்கள் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தேனி கலெக்டர் தெரிவித்தார்;
தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆண்டுதோறும் சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளிலும் மிகப்பெரிய சாதனை புரியும் பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2022-ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சமுதாயத்தில் துணிச்சலான, தைரியமிக்க சாதனை புரிந்த பெண்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகிற 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.