ஹலோ எப்.எம்.மின்லேடீஸ் டே' நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் பங்கேற்பு'

ஏராளமான பெண்கள்

Update: 2023-01-28 20:15 GMT

ஹலோ எப்.எம்.மின் 'லேடீஸ் டே' நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

'லேடீஸ் டே' நிகழ்ச்சி

ஹலோ எப்.எம். சார்பில் ஈரோட்டில் நேற்று 'லேடீஸ் டே' நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 9 மணி முதல் போட்டிகளில் பங்கேற்க உள்ள பெண்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டு இருந்தது. எனினும் காலை 8 மணி முதலே பெண்கள் அரங்கத்தில் குவிய தொடங்கினர்.

'லேடீஸ் டே' நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் நடனப்போட்டி, ரங்கோலி, மெஹந்தி, பேஷன் வாக், அல்லிதர்பார் என அறிவிக்கப்பட்ட அனைத்து போட்டிகளிலும் நூற்றுக்கணக்கான பெண்கள் போட்டி போட்டிக்கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்தனர்.

பெண்களுக்கு பரிசு

நிகழ்ச்சியில் அறம் அறக்கட்டளை தலைவர் கிருத்திகா சிவகுமார், இலஞ்சி அறக்கட்டளை தலைவர் ஜானகி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து போட்டிகளை தொடங்கி வைத்தனர்.

இதில் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தினார்கள். அதைத்தொடர்ந்து மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது.

விழாவில் திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கு மிக்சி, குக்கர் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்களை வழங்கி பேசினார். மேலும் பம்பர் பரிசு போட்டியில் முதல் பரிசாக எல்.இ.டி. டி.வி. கிருத்திகா என்பவருக்கும், 2-ம் பரிசாக வாஷிங் மிஷின் சர்குணம் என்பவருக்கும், 3-ம் பரிசாக குளிர்சாதன பெட்டி பாத்திமா என்பவருக்கும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெண்கள் பல்வேறு பரிசுகளுடன் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்