விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தில் சுமூக முடிவு
விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தில் சுமூக முடிவு ஏற்பட்டதால், பா.ஜனதா கட்சியினரின் போராட்டம் கைவிடப்பட்டது.;
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள கந்தசாமிபுரம் கிராமத்திற்கு செல்லக்கூடிய அரசு பஸ் சரி வர இயக்கப்படாமல் இருப்பதை கண்டித்து பா.ஜனதா கட்சி சார்பில் புதூர் பஸ் நிலையம் முன்பு இன்று(வெள்ளிக்கிழமை) சாலை மறியல் மற்றும் அரசுபஸ் சிறை பிடிப்பு போராட்டம் நடத்தப்்போவதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சசிகுமார் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. இதில் அரசு போக்குவரத்து கழக விளாத்திகுளம் கிளை மேலாளர், இன்ஸ்பெக்டர் இளவரசு, கிராம மக்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் மாதலாபுரம் கிராமத்தில் மாற்றுப்பாதையில் அரசுத்துறை மற்றும் பொதுமக்கள் உதவியுடன் சாலையை சரி செய்வது எனவும், உடனடியாக அரசு பஸ்சை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து இன்று நடத்த திட்டமிட்டிருந்த பா.ஜனதா கட்சியினரின் போராட்டம் கைவிடப்பட்டது.