வேலூரில் கடும் பனிப்பொழிவு

வேலூரில் கடும் பனிப்பொழிவு காரணமாக ராகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

Update: 2022-12-30 12:15 GMT

வேலூரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பனிப்பொழிவால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு மட்டுமல்லாது காலை 9 மணி வரை போர்வைக்குள் பலர் தஞ்சமடைந்தனர்.

இந்தநிலையில் வழக்கத்தை விட நேற்று காலையிலும் பனியால் நடைபயிற்சி மேற்கொள்ள முடியாமல் பலர் தவித்தனர். பலர் தலையில் குல்லா மற்றும் ஸ்வெட்டர் அணிந்தபடி நடந்து சென்றனர். காலை 8 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றனர்.

வேலூர் நகரில் உள்ள மலைகள் மூடுபனியால் கண்களுக்கு தெரியாத வகையில் மூடப்பட்டிருந்தது. வெயில் அதிகரிக்க தொடங்கியதையடுத்து 9 மணி அளவில் மலைகள் கண்களுக்கு தென்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்