மாநகரில் கடும் பனிப்பொழிவு

மாநகரில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.;

Update: 2023-02-19 20:46 GMT

பொதுவாக மார்கழி மாதம் தான் கடும் குளிர் அனைவரையும் வாட்டி வதைக்கும். தற்போது தை மாதம் முடிந்து மாசி மாதம் பிறந்துவிட்டது. இருப்பினும் திருச்சி மாநகரில் முன் எப்போதும் இல்லாத வகையில் நள்ளிரவில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இது காலை 7 மணிக்கு மேலும் நீடிக்கிறது. கடும் பனிப்பொழிவால், இரவு நேரம் வேலை முடிந்து செல்பவர்களும், அதிகாலையில் வேலைக்கு செல்பவர்களும் மிகவும் அவதி அடைந்தனர். காலையில் விடிந்த பின்பும் கடும் பனிமூட்டம் இருந்ததால் சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் அனைத்தும் காலையிலும் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றதை காண முடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்