மதுக்கூர் பகுதியில் கடும் பனிப்பொழிவு
மதுக்கூர் பகுதியில் கடும் பனிப்பொழிவு
மதுக்கூர் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. அதிகாலையில் சாலையில் பனிமூட்டமாக காணப்படுவதால், வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அவதி அடைகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டயவாறு சென்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது பனிப்பொழிவு காணப்படுவதாலும், வானிலை மாற்றங்களாலும் பயிர்களில் பூச்சி தொல்லை மற்றும் பயிரின் வளர்ச்சியில் குறைப்பாடு ஏற்படும் என்றனர்.